contact@jayaom.com      +91 (044)-2484-1024

தினந்தோறும் 'ஓம்' பிரணவ படத்தையோ அல்லது 'ஓம்' பிரணவ விக்ரகத்தையோ

வைத்து அதற்குத் தீபம் ஏற்றி, புஷ்பங்களை சாத்தி, குரு சுலோகம், கடவுள் ஜப மந்திரம், ஆத்மநிஷ்டை, ஜெய ஓம் பாட்டு, ஜெயபரமாத்மா சுலோகம் சொல்லி, பிறகு நிற்குண அஸ்டோத்ர அர்ச்சனை செய்து வந்தால் மக்களின் குறைகள் தீர்ந்து பிணி, பீடை அகன்று, வறுமை நீங்கி, மங்கள வாழ்வு ஏற்படும், கடவுள் அருளால் பரமார்த்திகம் உண்டாகும்.

அறிமுகம்

சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள்

உலக மக்கள் முன்னேற்றத்திற்காக அடியிற்கண்ட நிறுவனங்களுடன் கூடிய ஞானோதய ஆலய (கேந்திரம்) சுவாமிகளால் 24.06.1951 ஸ்தாபனம் செய்யப்பட்டது.

  • ஞானோதய மன்றம்
  • ஞானோதய அன்னதான சாலை
  • ஞானோதய விசுவ வித்யாலயம்
  • நிஷ்காமிய சேவா சங்கம்

சுவாமியின் வாழ்விலிருந்து

சுவாமியின் வாழ்விலிருந்து சில சுவையான அனுபவங்களை இங்கே காண்போம்...

ஆரம்ப பள்ளி செல்லும் அகவையிலேயே, தினமும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கிராமத்திலுள்ள கோயிலுக்குப் போய்வருவது சுவாமிகளது வழக்கமாயிருந்தது. இதன் காரணமாகக் கோயிலில் ஸ்ரீ ராம நாம ஜெபத்தில் லயித்தும், பிரார்த்தனையிலும், பஜனையிலும் வெகுவாக ஈடுபட்டிருந்தார்கள். நாளடைவில் பக்தி முதிர்ந்து, ஸ்ரீ ராம விக்கிரகத்தை எந்த நேரமும் பார்ப்பதும்,ஆனந்தக் கண்ணீர் சொரிவதுமாக இருந்து வந்தார்கள். பெரியோர்கள் பஜனை செய்யும்போது சுவாமிகள் தன்னை மறந்த நிலையில் ஆனந்தக் கூத்தாடுவார்கள். 'ராமனே இருதயத்தில் வாசஞ் செய்கிறான். ராமனே உலக உயிர்கள் அனைத்திற்கும் உண்மையான தந்தை' என்று எப்போதும் நினைத்து வந்தார்கள். ஸ்ரீ ராமபிரானைத் தரிசனம் செய்து அவருடன் இரண்டற கலக்கவேண்டும் என அல்லும் பகலும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார்கள். சுவாமிகள் தன்னந்தனியாகத் தினந்தோறும் மாலையில் ஒரு மைலுக்கு மேல் ஸ்ரீ ராம நாமத்தைத் தியானித்துக் கொண்டே உலாவி வருவது வழக்கம். எப்பொருளிலும் எவ்வுயிரிலும் ஸ்ரீ ராமபிரான் நிறைந்துள்ளார் என்ற திட மனத்துடன் அன்பு காட்டி பேரானந்தம் பெற்று வந்தார்கள்.
1942-ல் திருதணிகையில் தங்கி உத்தியோகம் தேடும் காலங்களில், மாலை வேலைகளில் திருத்தணிகை மலைக்கு அருகில் ஏழு ஊற்றுக்கள் இருந்த இடங்களுக்கு சென்று ஏகாந்தமாய் ஸ்ரீ ராம நாமத்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் உச்சரித்து கொண்டு வந்தார்கள். ஸ்ரீ ராம நாம ஜெபத்தின் போது சில சமயங்களில் இருதயத்திலிருந்து உண்மையின் தத்துவம் திடீரென தோன்றும், மறையும் சூரியன், மலை மற்றும் இயற்கைக் காட்சிகளை கண்ணார உற்று நோக்கி, களிப்படைந்து ஸ்ரீ ராம நாமத்தை சொல்லி வந்தார்கள். ஸ்ரீ ராம நாம ஜெபத்துடன் வேகமாக வீடு திரும்பி தன்னுள் தோன்றிய உண்மையின் தத்துவங்களை குறித்து வைத்துக் கொள்வார்கள். 'ஓம்' என்று துவங்கி 'பரமாத்மன்' என்று எழுதி அதன் கீழ் 'ஞானோதயம்' என்று குறித்து பிறகு தத்துவ உண்மைகளை எல்லாம் எழுதி கடைசியில் 'ஓம்' என்று முடிப்பார்கள்.
1947-ல், ஒரு குறிப்பிட்ட தினத்தில் இரவில் ஸ்ரீ ராமபிரானைத் தரிசிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் சுவாமிகளுக்கு உண்டாயிற்று. அதற்காக லீவு எடுத்துக் கொண்டு தம் கிராமத்திற்கு சென்றார்கள். அங்கு ஓர் அறையில் தினமும் பல மணி நேரம் ஜெப சாதனையில் ஈடுபட்டு வந்தார்கள். ஜனங்கள் அறைக்குள் நுழைந்து ஜெப சாதனைக்கு இடையூரு விளைவித்தார்கள். ஆகையால் ஐந்து நாட்களுக்குப் பிறகு, சுவாமிகளின் தமையனார் திரு.ராமராஜூ அவர்களின் ஆவடியிலுள்ள வீட்டில் மேலும் ஐந்து நாட்கள் வைராக்கியத்துடன் ஜெப சாதனை செய்வதற்காக சுவாமிகள் சென்றார்கள்.

ஆவடியில் ஐந்து நாட்கள் மிகவும் தீவிரமான ஜெப சாதனையை மேற்கொண்டார்கள். குறிப்பிட்ட நாள் இரவில் அறையில் ஜெப சாதனையில் ஈடுபட்டுக் கொண்ருந்தபோது ஸ்ரீராமரையும், சீதையையும், இலட்சுமணரையும், ஆஞ்சநேயரையும் சுவாமிகள் தரிசித்தார்கள்.

நல்லாங்குப்பம் காளி கோயிலில் சுவாமிகள் இரவு நேரங்களில் பலமணிநேரங்கள் நிஷ்டையில் அமர்திருப்பார்கள். 01-06-1950-ஆம் தேதியிலிருந்து சுவாமிகள் மௌன விரதம் பூண்டு காளி கோயில் எதிரில் ஒரு குழியில் அமர்ந்து தினந்தோறும் பல மணி நேரம் நிஷ்டை புரிந்தார்கள். பிரதி தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமிகளை வந்து தரிசித்தனர். காளி கோயில் சமீபத்தில் 24-06-1950-ல் நள்ளிரவு 12 மணிக்கு 'ஜீவசமாதி' அடைவது என்னும் எண்ணம் சுவாமிகளுக்கு உதித்தது. அவ்வெண்ணத்தை சீடர்களுக்கு தெரிவித்தார்கள். மௌனத்தில் இருந்த காலத்தில் தினந்தோறும் மாலைவேளைகளில் குழியிலிருந்தவண்ணம் சீடர்களின் மூலம் குழுமியிருந்த பக்தர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். 24-06-1950 அன்று காளி கோயிலை சுற்றிலும் பல்லாயிர கணக்கான மக்கள் சுவாமிகளை தரிசிக்க கூடிவிட்டனர். சுவாமிகள் கோயிலின் மேல்தளத்தில் நின்றுகொண்டு அனைவருக்கும் தரிசனம் கொடுத்தார்கள். ஜனங்கள் சுவாமிக்கு பழங்கள், பணம், இனிப்பு பட்சணங்கள் முதலியவற்றை சுவாமிகளுக்கு சமர்பித்தனர். அவற்றை எல்லாம் சுவாமிகள் ஜனங்களுக்கு நாலாபக்கங்களிலும் வீசி எரிந்தார்கள். பிறகு சுவாமிகள் கோயிலின் மீதிருந்து இறங்கி வந்து கோயில் முன் இருக்கும் பலிப்பீடத்தில் அமர்ந்தார்கள். பலிப்பீடத்தில் நிஷ்டையில் அமர்திருந்த சுவாமிகள் நள்ளிரவு 12 மணிக்கு ஜீவசமாதி எய்தி சுயநினைவை இழந்து ஆண்டவனுடன் ஒன்றறக் கலந்த நிலையில் இருந்தார்கள். போலீசார் பயபக்தியுடன் சுவாமிகளை தூக்கிச்சென்று காளி கோயிலுக்குள் வைத்து கதவை மூடிவிட்டனர். அப்போது கனத்த மழை பெய்தது. 18 மணி நேரம் ஜீவசமாதியில் இருந்த பிறகு 25-06-1950 ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு ஜீவசமாதியிலிருந்து கலைந்து சுவாமிகள் கோயிலின் வெளியே வந்தார்கள்.

பக்தர்கள் வருகை

ஆண்டுதோறும் குருவின் அருள்வேண்டி அவரை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கான தோராயமான எண்ணிக்கையின் வரைபடம்.

வருடம்:1996
20% Complete (success)
வருடம்:2006
45% Complete (success)
வருடம்:2015
80% Complete (success)


சமீபத்திய பதிப்புகள்

விழித்திரு

பதிப்பை பற்றி சில வார்த்தைகள்...

துணிவே துணை

பதிப்பை பற்றி சில வார்த்தைகள்...

அன்பே மருந்து

பதிப்பை பற்றி சில வார்த்தைகள்...

அண்டம் யாவும்

பதிப்பை பற்றி சில வார்த்தைகள்...




  குறுந்தகவல்

சுவாமிகளின் உண்மை பக்தர்களில் ஒருவரான திரு K.C. கண்ணப்ப முதலியார் என்பவர் சுவாமிகளுக்கு 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரைச் சூட்டி, சுவாமிகளை புகழ்ந்து ஒரு பாடலை எழுதி, அச்சிட்டு ஞானோதய மன்றத்தில் குழுமியிருந்த எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அவ்வேளை முதல் சுவாமிகள் 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

  தெய்வீக கீதங்கள் [#5]

பாவண ராமா பரம தயாளா
தாரக ராமா நித்தியானந்தா
சீதா ராமா துஷ்ட சம்ஹாரா
ஜெய ஜெய ராமா கருணாநந்தா
ஹரே ஹரே ராம ஜோதி ஸ்வரூப
சற்குரு நாதா சச்சிதானந்தா

  தொடர்பு கொள்க
ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமி மடம்

ஞானோதய ஆலயம் [கேந்திரம்],
பதிவு எண் : 73/2006,
Dr. சுப்பராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600024.

+91 (044)-2484-1024 , +91 99405 88230
contact@jayaom.com
சேவை நேரம் 6:30AM - 7:30PM